'சின்னப் பையன்' ராகுல்: வாட்ஸ்-அப்பில் விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகிக்கு 'ஆப்பு'!
காங்கிரஸ் கட்சியின் துணத்தலைவரான ராகுல் காந்தியை 'சின்னப் பையன்' என்னும் பொருள்படும்படியான பப்பு என்னும் வார்த்தையால் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் விமர்சித்த...


புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் துணத்தலைவரான ராகுல் காந்தியை 'சின்னப் பையன்' என்னும் பொருள்படும்படியான பப்பு என்னும் வார்த்தையால் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் விமர்சித்த, அக்கட்சி நிர்வாகி ஒருவரின் பதவியை பறித்து அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகர காங்கிரஸ் பொறுப்பாளராக இருப்பவர் விவேக் பிரதான். இவர் மீதுதான் ராகுல் காந்தியை 'பப்பு' என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் விமசித்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து விவேக் பிரதான் கட்சி பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக கட்சி மேலிடத்தில் இருந்து தகவல் வெளியானது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள விவேக் பிரதான், குறிப்பிட்ட அந்த படங்கள் போட்டோ ஷாப் மூலம் சித்தரிக்கப்பட்டவை என்றும், என் தரப்பு நியாயத்தை விளக்ககூட எனக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...