காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த 4 தினங்களில் இதுபோன்று அத்துமீறி நடத்தப்பட்ட 9-ஆவது தாக்குதல் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடருகே இதுவரை மொத்தம் 12 தாக்குதல்கள் அந்நாட்டு ராணுவத்தால் அத்துமீறி நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் மேத்தா, ஜம்முவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ரஜௌரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தனர் என்றார் மணீஷ் மேத்தா.
காஷ்மீரில் கடந்த திங்கள்கிழமை மட்டும் 3 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...