காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2017, 5:28 am

DIN

புது தில்லி: மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இறைச்சிக்கக மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், எஸ்.கே கவுல் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது  குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.