மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது

மகாராஷ்டிரத்தில் மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Man held for stealing gold ring with promise of magic trick

கோப்புப்படம்.

Published On :

மகாராஷ்டிரத்தில் மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், பீமா ஜாதவர் என்பவர் மருத்துவ சிகிச்சை பெற புணே செல்வதற்காக கைஜ் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், அதிசயத்தை காண விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, இருவரும், ஜாதவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி வெள்ளை நிறக் கைக்குட்டையில் வைக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் மேஜிக்கை பார்க்க கண்களை 10 நிமிடங்கள் மூடி இருக்குமாறு அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறியபடி ஜாதவரும் கண்களை மூடியிருக்கிறார். பிறகு திறந்து பார்த்தபோது, இருவரும் மோதிரத்துடன் மாயமாகி விட்டனர். குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் மதாரி என்பது தெரியவந்தது.

இந்தப் பகுதியில் இதுபோன்ற நூதன முறையில் திருடுவதில் பெயர்போன ஒரு கும்பலைச் சேர்ந்தவர் இவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போது அம்ஜத் மதாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Summary

A man was arrested for allegedly stealing a gold ring from a person after promising to show him magic, a Beed police official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.