ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு வலுக்கிறது
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. அவருக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. அவருக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதை அடுத்து, பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி புதன்கிழமை ஆதரவு தெரிவித்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், அக்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசித்து குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளன.
ஜேடியு ஆதரவு: இந்நிலையில், பிகாரில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் ஜேடியு கட்சி ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிகார் ஆளுநராக பதவி வகித்துவந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜகவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இது கட்சி சார்பில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவாகும். பாஜகவை கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்ப்போம். அதேபோல், பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஜேடியு பங்கு வகிக்கும்.
அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கு வியாழக்கிழமை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஜேடியு பங்கேற்காது என்றார் தியாகி.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது நிதீஷ் குமார் அதற்கு ஆதரவு தெரிவித்தார். இது, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்போது, பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்னிறுத்துவதற்காக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் ஜேடியு முன்னாள் தலைவர் சரத் யாதவ் பங்கேற்று வந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்துக்கு ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிவசேனை ஆதரவு: பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சிவசேனையும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸýம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவை அண்மையில் சந்தித்து பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கோரினர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்காத மேலும் சில எதிர்க்கட்சிகளும் ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...