பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்துடன் இனி இந்தியும் 'ஆஜர்': சுஷ்மா அறிவிப்பு!

பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்துடன் இனி இந்தி மொழியும் இடம்பெறும் என்று மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்துடன் இனி இந்தியும் 'ஆஜர்': சுஷ்மா அறிவிப்பு!

புதுதில்லி: பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்துடன் இனி இந்தி மொழியும் இடம்பெறும் என்று மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தலைநகர் தில்லியில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார். 

நிகழ்வில் அவர் பேசியதாவது:

இந்திய பாஸ்போர்ட்களில் இனி ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் இடம்பெறும். அத்துடன் 8 வயதுக்கு உட்பட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% சதவீதம் சலுகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com