பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

‘மீரா குமார் என்னை நடத்திய விதம் இப்படிதான்’: சுஷ்மா டுவிட் செய்த மக்களவை வீடியோ!

மக்களவை எதிர்கட்சி தலைவராக இருந்த என்னை மீரா குமார் நடத்தி விதம் இப்படிதான் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

DIN

புது தில்லி: மக்களவை எதிர்கட்சி தலைவராக இருந்த என்னை மீரா குமார் நடத்தி விதம் இப்படிதான் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பழைய வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், இரு தினங்களுக்கு முன்பு தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவு வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவையில் மீரா குமார் எத்ர்கட்சி தலைவரை நடத்திய விதம் இதுதான் என,

This is how Lok Sabha Speaker Meira Kumar treated the Leader of Opposition - https://t.co/hxHWHaJ4D9
    — Sushma Swaraj (@SushmaSwaraj) June 25, 2017

பழைய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஷ்மாவின் 6 நிமிட உரையில் 60 முறை மீரா குமார் குறுக்கிட்டு தடையை ஏற்படுத்தி உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சரமாரியாக விமர்சனம் செய்வதும். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஊழல் நிறைந்த அரசு என விமர்சனம் செய்துள்ளார்.

அதற்கு பாஜக உறுப்பினர்கள் எல்லோரும் பாராட்டுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சியற்ற நிலையில் அமர்ந்திருப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.