எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாளை மீராகுமார் சென்னை வருகை: மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் சனிக்கிழமை (ஜூலை 1) சென்னை வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

News image
Updated On :29 ஜூன் 2017, 8:55 pm

DIN

காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் சனிக்கிழமை (ஜூலை 1) சென்னை வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக சார்பில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வையாபுரி குளம் தூர்வாரப்படும் பணியை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஏரி, குளங்களைத் திமுகவினர் தூர் வாருவதை அதிமுக தவறாக விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. திமுகவின் பணியை மறைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசு தூர்வாருவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுகின்றனர். ஆனால், அரசு சார்பில் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதே உண்மை.குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் சனிக்கிழமை (ஜூலை 1) மாலை சென்னை வருவதாக எங்களுக்குச் செய்திகள் வந்திருக்கின்றன. அதன்படி, அவர் வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.