கொழும்பு: திங்கள்கிழமை அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என்று இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை அன்று இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கழுத்தில் தோட்டா பாய்ந்து மீனவர் பிரிட்ஜோ (21) அதே இடத்தில் உயிரிழந்தார். செரோன் (22) என்ற மற்றொரு மீனவர் காலில் காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கடலோர மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் மரணம் அடைந்த மீனவரை நாங்கள் சுடவில்லை என்று இலங்கை கடற்படை நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இலங்கைக் கடற்படை இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள்கிழமை அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தளபதியின் உத்தரவு இல்லாமல் அவர்கள் துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
இதுவரை அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்த 88 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் 146 படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


