பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பு!
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலில் கோவாவில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் முதல்வராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் நாளை மாலை ஐந்து மணிக்கு கோவா மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளதால், தன்னுடைய அமைச்சர் பதவியை இன்று காலை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது பாதுகாப்புத் துறையானது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...