ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நான் வகுப்பு மாறி பிரயாணம் செய்ய வேண்டுமா? ஏர் இந்தியா ஊழியரை காலணியால் தாக்கிய எம்.பி!

தான் வைத்திருந்த வகுப்புச் சீட்டுக்கு மாறாக வேறொரு வகுப்பில் விமானப் பயணம் செய்தது தொடர்பான விவகாரத்தில், ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி காலணியால் ...

News image
Updated On :23 மார்ச் 2017, 11:33 am

தினமணி

மும்பை: தான் வைத்திருந்த வகுப்புச் சீட்டுக்கு மாறாக வேறொரு வகுப்பில் விமானப் பயணம் செய்தது தொடர்பான விவகாரத்தில், ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி காலணியால் தாக்கிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மகாராஷ்டிராவின் ஓஸ்மானாபாத் தொகுதி எம்.பி ரவீந்திர கெய்க்வாட். இவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவராவார்.இவர் இன்று காலை புனேவிலிருந்து தில்லிக்கு செல்லும் ஏர் இந்தியாவின் ஏ.ஐ.852 விமானத்தில் பயணம் செய்தார்.

அவரிடம் 'ஓபன் பிசினஸ் கிளாஸ்' என்னும் உயர் வகுப்பு பயணச்சீட்டு இருந்தது. ஆனால் அவர் ''எக்கனாமி கிளாஸ்' என்னும் வேறொரு வகுப்பில் பயணம் செய்ததாகத் தெரிகிறது. இவர் பயணம் செய்த விமானமானது இன்று காலை 1030 மணியளவில் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடைந்தது.

வகுப்பு மாறி பிரயாணம் செய்த எரிச்சலில் இருந்த கெய்க்வாட் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து தகராறு செய்தார். இதனால் மற்ற  பயணிகளுக்கும் சிரமமான சூழல் உருவானது.இதனால் நிலைமையை சரி செய்ய ஏர் இந்தியா இரண்டு ஊழியர்களை அனுப்பியது.

அவர்களிடம் கெய்க்வாட் நிலையை விளக்கி பேசும் பொழுது அவர்கள் அவரை விமானத்தில் இருந்து முதலில்இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கெய்க்வாட் தன்னுடைய செருப்பால் அவர்களை  தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊழியர்களை தாக்கியது உண்மை என்றும் ஆனால் அவர்கள் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

ஏர் இந்தியா  தரப்பில் குறிப்பிட்ட விமானம் பழைய வகை விமானம் என்றும், அதில் எக்கனாமி கிளாஸ் என்னும் வடிவமைப்பில்தான் இருக்கைகள் உள்ளதாகவும், அதனால்தான் எம்.பியை ஓபன் பிசினஸ் கிளாஸ் என்னும் உயர் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும், எக்கனாமி கிளாஸ் இருக்கை வடிவமைப்பில் பயணம் செய்யக் கோரியதாகவும் தெரிகிறது.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.