கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து! 

மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

News image
Updated On :27 மார்ச் 2017, 8:39 am

புதுதில்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் மத்திய அரசு தான் வழங்கும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வருகிறது. தற்போது அலைபேசி சிம் கார்டு வாங்குவதற்கு, ஓட்டுநர் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆதார் எண் அவசியமாகிவருகிறது.

இவ்வாறு மத்திய அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞரான ஷ்யாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள், 'மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நல திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை' என்று கருத்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.