ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் திட்டமிட்டபடி நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்று மத்திய அரசு இன்று மக்களவையில் ...

News image
Updated On :29 மார்ச் 2017, 12:22 pm

DIN

புதுதில்லி: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் திட்டமிட்டபடி நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்று மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பொட்டிபுரம் என்னும் இடத்தில் மலையைக் குடைந்து நியூட்ரினோ திட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தினை எதிர்த்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பினைச் சேர்ந்த சுந்தர்ராஜன் முதலில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலப்பிரிவில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இது  தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் அடங்கிய புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ள தகவல் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இம்மாதம் 20-ஆம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பாயம் உதரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு இந்திய அணுசக்தி கழகத்தின் அறிக்கை ஒன்று பதிலாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கால்தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் திட்டமிட்டபடி நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்றும், திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தாமதாவதால் திட்டம் காலதாமதாவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.