பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களுக்கு ஏப்ரல்-1 முதல் தடை!
பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதுதில்லி: பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக அவை வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு பி.எஸ் என்னும் தர நிர்ணய முறை வாகனங்களுக்காக தயாரிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்பொழுது விற்பனையாகும் வாகனங்களில் பி.எஸ் 3 தர நிர்ணய முறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை இன்று பிறப்பித்துள்ளது.
அதன்படி பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...