குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) உத்தரவிட்டுள்ளது.


இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. அதில், இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, ஈரானில் குல்பூஷண் ஜாதவ் வியாபாரம் செய்து வந்ததாகவும், அப்போது அவர் கடத்தப்பட்டு விட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த ஹேக் நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் உள்ள ராணுவ நீதிமன்றத்தால் குல்பூஷண் ஜாதவுக்கு கடந்த மாதம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
முன்னதாக, இந்திய கடற்படையில் குல்பூஷண் ஜாதவ் பணியாற்றியதை இந்தியா ஒப்புக் கொண்டது. எனினும், இந்திய அரசு தொடர்பான எந்த பணியிலும் அவர் ஈடுபடவில்லை என்று மறுப்புத் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...