பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் வீடு தேடி வந்ததும் கட்டணம் செலுத்தலாம்: புதிய வசதி அறிமுகம்

முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள், பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:29 pm

DIN

முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள், பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐஆர்சிடிசி இணையதளத்திலும், செல்லிடப் பேசி செயலியிலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணி ஒருவர், டிக்கெட்டை மேற்கண்ட முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்போது இனிமேல் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, முன்பதிவின்போது பயணியால் அளிக்கப்படும் முகவரியில் டிக்கெட் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணத்தை அளித்தால் போதும். அந்த கட்டணத்தை ரொக்கமாகவோ, டிஜிட்டல் முறையிலோ அளிக்கலாம்.
முகவர், ரயில்வே கவுண்ட்டர் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் இருந்து பயணிகள் தாமாகவே இணையத்தில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு, பணம் செலுத்துவதற்கான வழிகளில் ஒரேயொரு முறை மட்டும், டிக்கெட் வீடுகளில் நேரில் விநியோகிக்கும்போது கட்டணம் செலுத்தும் வசதி என்பதில் தங்களை சேர்க்க வேண்டும். இதற்கு பயணிகள் கட்டாயம் தங்களது ஆதார் எண் அல்லது நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்.
ரூ.5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.90 கட்டணமாக பெறப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.120 கட்டணமாக பெறப்படும். ஒருவேளை பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், தங்களது வீடுகளில் விநியோகிக்கப்படும் முன் ரத்து செய்ய விரும்பினால், அதற்காக விநியோக கட்டணம், ரத்து செய்வதற்கான கட்டணத்தை தனியே அளிக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.