இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்தியது உண்மை

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தன்னுடன் பேச்சு

News image
Updated On :11 மே 2017, 9:25 pm

DIN

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தன்னுடன் பேச்சு நடத்தியது உண்மைதான் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயரதிகாரியுமான கோபாலகிருஷ்ண காந்தி (72) (படம்) தெரிவித்தார். தேச தந்தை காந்தியின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக்காலம் நிறைவு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் ஆரம்பநிலை ஆலோசனையில் தலைமைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதேபோல, மாநிலங்களவையில் அதிக பலம் கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பையும் ஆராய்ந்து வருகின்றன.
இது தொடர்பாக இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக உள்ளிட்டவை பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. தமிழகத்தில் ஆளும் அதிமுக யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் யோசனை: இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயரதிகாரியுமான கோபாலகிருஷ்ண காந்தியுடன் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் பேசினர்.
இது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், மிகவும் ஆரம்ப நிலையில்தான் அந்த பேச்சுவார்த்தை உள்ளது. மேற்கொண்டு எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை' என்றார்.
2012-இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு கோபாலகிருஷ்ண காந்தியை அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக கேட்டுக் கொண்டது. ஆனால், அதை கோபாலகிருஷ்ண காந்தி நிராகரித்து விட்டார். தில்லி புனித ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் படித்து, 1968-ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக அரசுப் பணியில் இருந்தவர் கோபாலகிருஷ்ண காந்தி.
1985-87 காலகட்டத்தில் ஆர்.வெங்கட்ராமன் குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராகவும், வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது இணைச் செயலாளராகவும் கோபாலகிருஷ்ண காந்தி பணியாற்றினார்.
1997-2000 காலகட்டத்தில் கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அவரது செயலாளராக கோபாலகிருஷ்ண காந்தி இருந்தார். 2003-இல் ஐஏஎஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், மேற்கு வங்க மாநில ஆளுநராக தனது ஐந்து ஆண்டு பணியை நிறைவு செய்தார்.
சோனியா திட்டம்: இந்நிலையில் எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியரசுத் தலைவர் பதவிக்கு மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரின் பெயரை காங்கிரஸ் மேலிடம் ஏற்கெனவே பரிந்துரைத்தது. ஆனால், காங்கிரஸ் தன்னிச்சையாக முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கக் மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் ஒரே குரலாக வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை வரும் வாரத்தில் சந்தித்து பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.