டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 மே 2017, 2:42 pm

DIN

புதுதில்லி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவானத்து ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

அத்துடன் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.