சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சச்சினின் சுயசரிதை திரைப்படம்: மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சச்சின்

தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றிய சினிமா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :19 மே 2017, 9:55 am

DIN

புது தில்லி: தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றிய சினிமா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்துப் பேசினார்.

சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து, இந்தியாவின் நட்சத்திர வீரராக மாறியது வரையிலான வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மே 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திரைப்படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை இன்று சச்சின் சந்தித்துப் பேசியுள்ளார்.
 

Story image

இது குறித்து சச்சின் தனது சமூக வளைதலத்தில், பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விரைவில் வெளியாக உள்ள 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் குறித்து பேசி, அவரிடம் வாழ்த்துப் பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.