பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி கே.பி.எஸ்.கில் காலமானார்!
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும், காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்குவதில் பெரும்பங்கு வகித்தவருமான கே.பி.எஸ்.கில் (82) இன்று மாலை காலமானார்.


சண்டிகார்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும், காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்குவதில் பெரும்பங்கு வகித்தவருமான கே.பி.எஸ்.கில் (82) இன்று மாலை காலமானார்.
1980-களின் பிற்பகுதியில் பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதிக்கமிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற 'ஆப்பரேஷன் பிளாக் தண்டர்' எனப்படும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர் கேபிஎஸ்.கில் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பதவி ஓய்வுக்கு பிறகு 2000-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தாக்குதல் உத்திகளை வகுக்க இலங்கை அரசு கில்லை ஆலோசகராக அழைத்தது குறிப்பிடத்தக்கது.2002-ல் குஜராத் கலவரங்களுக்குப் பிறகு மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, மாநில பாதுகாப்பு ஆலோசகராகவும் கில் செயல்பட்டார் .
சமீபமாக சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கில், கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...