மகாத்மா காந்தியின் கொலையில் சாவர்க்கருக்குத் தொடர்பா? உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு
மகாத்மா காந்தியின் படுகொலையில் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு தொடர்பிருக்கிறதா?


மகாத்மா காந்தியின் படுகொலையில் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு தொடர்பிருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள அபிநவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும் ஆராய்ச்சியாளருமான பங்கஜ் பட்னிஸ் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மகாத்மா காந்திஜியை நாதுராம் கோட்úஸ சுட்டுக் கொன்றார். அப்போது, கோட்úஸ வைத்திருந்த கைத்துப்பாக்கியில் இருந்து 3 குண்டுகள் மட்டுமே காந்தியின் உடலில் பாய்ந்தன. மொத்தம் 7 குண்டுகள் இருந்த அந்தத் துப்பாக்கியில் எஞ்சியிருந்த 4 குண்டுகள் கைப்பற்றப்பட்டன என்று காவல் துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரத்தில் காந்திஜி மீது மற்றொரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.
அந்த நபர் விநாயக் தாமோதர் சாவர்க்கராக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்றும் எந்த அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது? என்றும் தெரியவில்லை. காந்திஜியின் படுகொலை குறித்து விசாரிக்க கடந்த 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையிலான குழுவால் முழுமையாக விசாரிக்க இயலவில்லை.
இந்த வழக்கில் பல்வேறு விஷயங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன. நான் மேற்கொண்ட ஆய்வின்படி, அப்போதைய செய்தித்தாள்களில் காந்திஜி உடலில் 4 குண்டுகள் துளைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, காந்திஜியை வேறொரு நபர் சுட்டுக் கொன்றிருக்கிறார். அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, மூடிமறைக்கப்பட்ட இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொணர புதிய விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பங்கஜ் பட்னிஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் பட்னிஸ் இம்மாதம் 10-ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "காந்திஜியின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சாவர்க்கரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் உண்மையான கொலையாளியைக் கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...