ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

அடுத்த ஆண்டில் 10 நீர் வழித்தடங்களில் போக்குவரத்து தொடக்கம்: நிதின் கட்கரி

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 நீர் வழித்தடங்களில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 நீர் வழித்தடங்களில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் 111 தேசிய நீர் வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் மத்திய சாலை நிதியத்தின் (சிஆர்எஃப்) நிதியுதவியுடன் 10 நீர் வழித்தடங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும்.
இந்தத் திட்டத்துக்காக, மத்திய சாலை நிதியத்தில் இருந்து ரூ.2,000 கோடியை அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
அந்தத் தொகையுடன் மேலும் நிதி சேகரித்து, ரூ.12,000 கோடி செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கங்கை நதியில் (தேசிய நீர் வழித்தடம் எண்.1), உலக வங்கியின் நிதியுடன் ரூ.5,000 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. 1,620 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாராணசி, மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா, பிகாரில் உள்ள சாஹேப்கஞ்ச் ஆகிய நகரங்களை இணைக்கும். கங்கையைத் தொடர்ந்து, பிரம்மபுத்திரா நதியில் (தேசிய நீர்வழித்தடம் எண்.2) பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு அடுத்த மூன்று மாதங்களில் மாண்டவி, ஜுவாரி நதிகளில் பணிகள் தொடங்கப்படும்.
இதேபோல், அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 தேசிய நீர் வழித்தடங்களில் பணிகளைத் தொடங்குவதற்கு கப்பல் போக்குவரத் துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று நிதின் கட்கரி கூறினார்.
நாடு முழுவதும் தற்போதுள்ள 5 தேசிய நீர்வழித்தடங்கள், 106 புதிய நீர் வழித்தடங்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பராமரிக்கவும் தேசிய நீர் வழித்தடச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களால், நீர்வழி போக்குவரத்துத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 1.8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.