பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ் அறிவிப்பு
பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.


பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அதன் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் பசுவதையில் ஈடுபடுவதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை.
பசுவதை என்பது சமூகம், கலாசாரத்துக்கு மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கும் எதிரான செயலாகும்.
பசுவதையில் ஈடுபட்டவர்கள் கட்சியிலிருந்து ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியிலிருக்கும் சில மாநிலங்களிலும் பசுவதை நடைபெற்று வருகிறது.
பசுவதையில் ஈடுபடுபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று பாஜக, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கும் அறிவுறுத்துமா?
இத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும், காங்கிரஸ் கட்சி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.
காங்கிரஸிலிருந்து 3 பேர் இடைநீக்கம்: முன்னதாக, கேரளத்தில் பொது இடத்தில் பசுவதையில் ஈடுபட்டதற்காக இளைஞர் காங்கிரûஸ சேர்ந்த 3 பேர் கட்சியிலிருந்து திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஜில் மாக்குட்டி, நிர்வாகிகள் ஜோஷி கண்டாதில், சராஃபுதீன் ஆகியோர் 3 தினங்களுக்கு முன் பொது இடத்தில் பசுவதையில் ஈடுபட்டனர். பின்னர், அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இது காட்டுமிராண்டித்தனமான செயல் எனக் குறிப்பிட்டார்.
இதேபோல், கேரள காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹாசனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், யுவமோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பசுவதையில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸார் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக கண்டனம்: இளைஞர் காங்கிரûஸ சேர்ந்தவர்கள் பசுவதையில் ஈடுபடுபட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் செயல் வெட்கக்கேடானது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...