மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சரத் பவார் என்டிஏ-வில் இணைந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியிட விரும்பினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அவர் இணைய வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சரும்,

News image
Updated On :30 மே 2017, 8:00 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியிட விரும்பினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அவர் இணைய வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இதுகுறித்த இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் எடுக்கும்.
இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவாரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உண்மையில், பவார் இத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், சரத் பவாருக்கு நல்ல உறவு உள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். மகாராஷ்டிர அமைச்சர் திலீப் காம்ப்லே, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில், பத்திரிகையாளர்கள் நமது நண்பர்களைப் போன்றவர்கள். நம்மிடம் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றார் ராம்தாஸ் அதாவலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.