பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குஜராத் தேர்தல்: சிவசேனை தனித்துப் போட்டி

எதிர்வரும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக சிவசேனை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 75 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:40 pm

DIN

எதிர்வரும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக சிவசேனை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 75 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநில அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. 
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சி குஜராத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இதுதொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அதில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தனியாகப் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிவசேனை மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அனில் தேசாய் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஹிந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தி குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் 75 தொகுதிகளுக்கு வேட்பாளரை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் சிவசேனைக்கு இல்லை என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.