பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜிஎஸ்டி-யை முன்வைத்து சூரத் வர்த்தகர்களை காங்கிரஸ் தூண்டி விடுகிறது: ஸ்மிருதி இரானி தாக்கு

ஜிஎஸ்டி வரிவிதிப்பை முன்வைத்து சூரத் வர்த்தகர்களை காங்கிரஸ் கட்சி தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.

News image
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் 'செல்பி' எடுத்துக் கொண்ட வாக்காளர்கள். 
Updated On :9 நவம்பர் 2017, 7:57 pm

DIN

ஜிஎஸ்டி வரிவிதிப்பை முன்வைத்து சூரத் வர்த்தகர்களை காங்கிரஸ் கட்சி தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் அண்மையில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'இந்தியாவின் ஜவுளித் தொழில் மையமான சூரத் நகரின் முதுகெலும்பை மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் உடைத்து விட்டன' என்று குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, குஜராத்தின் தொழில் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஜவுளித்துறை அமைச்சரும், பாஜக பிரமுகருமான ஸ்மிருதி இரானி, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வர்த்தகர்களும் தொழில்துறையினரும் உரிய முறையில் வரி செலுத்தத் தயாராக இருக்கின்றனர். புதிய வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி-க்கு மாறுவதில் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் எனது ஜவுளித்துறை அமைச்சகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நான் ஏற்கெனவே சூரத் நகருக்கு சில முறை வந்தபோது, வர்த்தகர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்கள் ஆகியோர் ஜிஎஸ்டி வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட சில பிரச்னைகளை என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அவர்கள் உரிய முறையில் வரி செலுத்துவதில் உதவுவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
ஆனால், இந்த மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த விவகாரத்தை வைத்து மக்களைத் தூண்டிவிட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
சூரத் ஜவுளித் துறையைச் சேர்ந்த ஒரு குழு புதன்கிழமை தில்லிக்கு வந்தது. அக்குழு, ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இப்புதிய வரிவிதிப்பு முறையால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர் என்றார் ஸ்மிருதி இரானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.