தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திராவில் சம்பவம்: சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து தரைமட்டமான கட்டடம் (விடியோ)

ஆந்திர மாநிலம் குண்டூரில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த குடியிருப்புக் கட்டடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக விழுந்து தரைமட்டமானது.

News image
Updated On :13 நவம்பர் 2017, 12:20 pm


ஆந்திர மாநிலம் குண்டூரில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த குடியிருப்புக் கட்டடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக விழுந்து தரைமட்டமானது.

கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் இந்த சம்பவம் நடந்தது.

தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் சில நொடிகளில், பக்கத்தில் இருந்த காலி மனையில் விழுந்து தரைமட்டமானது.

பராமரிப்புப் பணிகளுக்காக, இந்த கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

இந்த கட்டடம் இடிந்து விழுந்த விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.