மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்தியாவில் மோடி அலை ஓயவில்லை: அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு இன்னமும் குறையவில்லை

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:51 pm

DIN

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு இன்னமும் குறையவில்லை என்று அமெரிக்க ஆய்வு மையமான 'பியூ' தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பிரபல ஆய்வு மையமாக விளங்கும் 'பியூ' நிறுவனம் சார்பில் இந்தியாவில் நிகழாண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் அரசியல் சூழல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. சுமார் 2,464 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி அமையப்பெற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருந்தபோதிலும், அவர் மீதான மக்களின் நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. குறிப்பாக, அவரது ஆட்சி நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த ஈடுபாடு இருக்கிறது.
இந்த ஆய்வில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக 10-இல் 9 இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவைப் பொருத்தவரை, மோடிக்கு அதிக அளவில் செல்வாக்கு உள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, 10-இல் 9 பேர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரம், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களிலும் மோடியின் செயல்பாடுகளுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயத்தில், பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய கிழக்கு மாநிலங்களில் மோடியின் செல்வாக்கு சற்றே சரிந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் எழுந்த மோடி அலையின் தாக்கம் இன்னமும் இருக்கிறது. மக்களிடத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கானது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விட 31 சதவீதம் அதிகம் இருக்கிறது. 
மோடியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வறுமை, வேலைவாய்ப்பின்மை, பயங்கரவாதம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு 10-இல் 7 பேர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.