ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

டிசம்பர் 15-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: மத்திய அமைச்சரவை முடிவு! 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2017, 8:21 am

புதுதில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு என இரண்டிற்கும் கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தினை ஜனவரி 5-ஆம் தேதி வரை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

அமைச்சரவையின் இந்த முடிவானது ஜனாதிபதிக்கு தீர்மானமாக அனுப்பப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.