ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 2017-ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அதன் குழுத்தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார். ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெறுகின்றனர். விருதுத் தொகையான ரூ.7 கோடியை மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த கருத்தாக்கத்தினை இம்மூவரும் தங்கள் கூற்றின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்த ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த ஆராய்ச்சியில் 37 இந்திய விஞ்ஞானிகள் உதவி புரிந்துள்ளனர்.
இந்த 37 இந்திய விஞ்ஞானிகளும் புணேவில் செயல்பட்டு வரும் வான்வெளி ஆராய்ச்சி மற்றும் இயற்பியல் (ஐ.யூ.சி.ஏ.ஏ) உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள்.
'ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் எங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஏனென்றால் இது மிகப்பெரிய சவாலாக விளங்கியது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். பலர் இதனை இயலாத காரியம் என்று விமர்சித்தனர்' என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


