சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

அதிகாரி நாற்காலியில் பெண் சாமியார்; அருகில் கைகட்டி நின்ற போலீஸ் அதிகாரி: சர்ச்சையைக் கிளப்பிய  புகைப்படம்!    

தில்லி காவல் நிலையம் ஒன்றில் அதிகாரிக்குரிய நாற்காலியில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ் அதிகாரி கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கும் புகைப்படம்... 

News image
Updated On :5 அக்டோபர் 2017, 9:07 am

புதுதில்லி: தில்லி காவல் நிலையம் ஒன்றில் அதிகாரிக்குரிய நாற்காலியில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ் அதிகாரி கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கும் புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது   

தில்லி காவல் துறையின் சதாரா மாவட்டத்தின் கீழ் வருவது விவேக் விஹார் காவல்நிலையம். இங்கு இல்லக்   காவல் அதிகாரியாகப் பணியாற்றுபவர் சஞ்சய் ஷர்மா. இந்நிலையில் இந்த காவல் நிலையத்தின் இல்லக்   காவல் அதிகாரியின் இருக்கையில் தில்லியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியாராக ராதே மா அமர்ந்திருக்கும் படங்கள் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகின. அந்த படத்தில் சஞ்சய் ஷர்மா இந்து பக்தர்கள் அணிவது போன்ற சிகப்பு நிற சால்வை ஒன்றினை அணிந்து கொண்டு, கைகளை கட்டிக் கொண்டு நிற்கிறார்.

இந்தப் படம் வெளியானதிலிருந்து இல்லக்   காவல் அதிகாரியின் இருக்கையில் பெண் சாமியார் ஒருவரை எப்படி அமர வைக்கலாம் என்று  கடும் சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தன. கடும் கண்டனங்களும்  எழுந்தன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த சம்பவம் குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி கிழக்குப் பகுதி காவல் துறை இணை ஆணையர்  ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

கூடுதல் உதவி ஆணைய பதவி நிலையில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியினைக் கொண்டு  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் சஞ்சய் ஷர்மா தற்பொழுது டிஸ்ட்ரிக்ட் லைன்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, 'பெண் சாமியார் ராதே மா தில்லியில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் இயறக்கை உபாதைக்காக விவேக் விஹார் காவல் நிலையம் வந்ததாகவும் சஞ்சய் ஷர்மா தெரிவித்ததாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.