சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நபரை சத்தீஸ்கரில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
Published on

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நபரை சத்தீஸ்கரில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபுடாபள்ளி கிராமத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீஸார், அங்குள்ள ஃபுடாபள்ளி கிராமத்தில் புதன்கிழமை இரவு முதல் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த புனேம் சோனா (30) என்ற மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். புனேம் சோனா மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வெகுமதியையும் 
போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com