தாமதமாகும் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை இதுவரை அறிவிக்காத தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாமதமாகும் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்
Updated on
1 min read

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை இதுவரை அறிவிக்காத தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12-ஆம் தேதி அறிவித்தது. ஆனால், குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இருபபினும் , அந்த மாநிலத்தில், வரும் டிசம்பர் 18-ஆம் தேதிக்கு முன்னதாக, பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக, ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு கடந்த 16-ஆம் தேதி சென்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடும் வகையில், தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது.
அந்த மாநிலத்தில் அனைத்து விதமான சலுகைகளும், இலவச அறிவிப்புகளும் வெளியிட பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிவிட்டது. ஹிமாசலப் பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்தபோதே, குஜராத் மாநிலத்துக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தால், அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்திருக்கும் என்று சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ""காங்கிரஸ் கட்சியின் கேள்வி, தேர்தல் ஆணையத்தின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் உள்ளது. தங்களது ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறுக்கிட்டதையே அக்கட்சி நினைவுபடுத்துகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com