இமாச்சல பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து: 6 பேர் காயம்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள சிரா நகரத்தை இணைக்கும் ஒரு கான்கிரீட் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து: 6 பேர் காயம்
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள சிரா நகரத்தை இணைக்கும் ஒரு கான்கிரீட் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

பாலம் இடிந்து விழும்போது ஒரு கார், மினி டிரக் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பாலத்தை கடந்துள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்துள்ளது. கார் மற்றும் மினி டிரக் பால இடிபாடுகளில் சிக்கியுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக பண்டிட் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

பாலம் இடிந்ததற்கு பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்தான் என தெரியவந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் நடக்கும் நேரத்தில், ஒரு கார், ஒரு மினி டிரக் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பாலம் கடந்து.

இதன் விளைவாக, பாலம் சரிந்தபோது, மோட்டார் சைக்கிள் நதியில் விழுந்தது, அதே சமயத்தில் கார் மற்றும் மினி டிரக் சிக்கியது.

பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இடிந்துள்ளது.

இந்த பாலம் தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) கீழ் கட்டப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com