எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நக்ஸல்கள் சரண்: 2019-ஆம் ஆண்டு வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு

நக்ஸல்கள் சரணடைவதற்கான காலவரம்பை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மகாராஷ்டிர அரசு நீட்டித்துள்ளது. மகாராஷ்டிர அரசு, நக்ஸல்கள் சரணடைவதற்கான திட்டத்தை கடந்த 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:50 pm

DIN

நக்ஸல்கள் சரணடைவதற்கான காலவரம்பை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மகாராஷ்டிர அரசு நீட்டித்துள்ளது. மகாராஷ்டிர அரசு, நக்ஸல்கள் சரணடைவதற்கான திட்டத்தை கடந்த 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் காவல் நிலையங்களில் சரணடையும் நக்ஸல்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். இந்நிலையில், நக்ஸல்கள் சரணடைவதற்கான காலவரம்பை நீட்டிக்கக் கோரி மகாராஷ்டிர காவல் துறை இயக்குநர் சதீஷ் மாத்தூர், மாநில உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதை பரிசீலித்த மாநில உள்துறை அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.