பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன்: மம்தா சூளுரை! 

என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 அக்டோபர் 2017, 10:56 am

கொல்கத்தா: என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மையக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சித் தலைவி மம்தா பானர்ஜி பேசியதாவது:

மத்திய அரசானது பொதுமக்களின் உரிமைகளிலும் சுதந்திரத்திலும் தொடர்ந்து தலையிடுகிறது. ஒருவரது ஆதார் எண்ணை அவரது மொபைல் எண்ணுடன் இணைக்க கூடாது. என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன்.

மத்தியி ல் ஒரு எதேச்சதிகார அரசை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்ப முடிவதில்லை. இல்லாவிட்டால் அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டும் பணி நடக்கிறது. 

கட்சியின் எல்லா தலைவர்களும் சிறைக்குச் சென்றாலும் எங்களின் போராட்டம் தொடரும். நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.  நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வர விரும்பாவிட்டாலும், தில்லியில் உள்ள அர சினை அகற்ற உதவுவோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.