பெங்களூர்: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்திரைதாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்
பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அப்துல் கரீம் தெல்கி மரணம் அடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2001-இல் முத்திரைதாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலகாவியைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த அப்துல் கரீம் தெல்கிக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டெல்கியின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இன்று மரணம் அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


