தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை!

நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2017, 12:06 pm

பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில் அமைந்துள்ளது அட்டூர் லே அவுட் பகுதி. இங்கு வசிக்கும் குமார் மற்றும் ஜோதி தம்பதியினரின் மகள் சந்தனா (12). அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அத்துடன் அங்குள்ள பத்ரிநாத் நடனப் பள்ளியில் தனியாக நடனம் பயின்று வருகிறார். இங்கு சதீஷ் (28) என்பவர் நடன ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.  சந்தனா சில நாட்களாக நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லையென்று  கூறப்படுகிறது. இதன் காரணமாக சதீஷ் அவளைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சந்தனா வழக்கம் போல நடன வகுப்புக்கு வந்த பொழுதும், சதீஷ் அவளைத் திட்டியிருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த சந்தனா தான் கையில் கொண்டு வந்திருந்த பள்ளிப் பையில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்

இதனைக் கவனித்த சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சந்தனா உடனடியாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தனாவின் உறவுகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சதீஷை உள்ளூர் பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.