டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரதமர் மோடிக்கு எதிராக சுட்டுரையில் தவறான கருத்துகளைப் பதிவிட்ட திக்விஜய் சிங்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தவறான கருத்துகளை மறுபதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:50 pm

DIN


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தவறான கருத்துகளை மறுபதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுரையில் பிரதமர் மோடியுடன் படத்துடன் பிறர் வெளியிட்ட அந்தப் பதிவை திக்விஜய் சிங் மறுபதிவு செய்ததையடுத்து, அவரை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, அந்த விமர்சனத்துக்கு பதிலளித்து திக் விஜய் சிங் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இன்னொருவரின் பதிவைத்தான் நான் மறுபதிவாக வெளியிட்டுள்ளேன். அது என்னுடைய கருத்து அல்ல. மறுபதிவாக வெளியிடும்போது, அதில் இடம்பெற்றிருக்கும் கருத்துகளை நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. இதுதான் சுட்டுரையின் அடிப்படைக் கொள்கையாகும்.
அதேபோல், அந்தப் பதிவை என்னுடைய பதிவாக நான் தெரிவிக்கவும் இல்லை. அத்தகைய வார்த்தைகளை நான் பயன்படுத்த மாட்டேன். 
சம்பந்தப்பட்ட நபரிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிறரை முட்டாளாக்கும் கலையில் அவர் கைதேர்ந்தவர் என்பதே எனது கருத்தாகும். இது அவதூறா? என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.