ஜப்பான் பிரதமர் இன்று குஜராத் வருகை: ஜப்பானிய மொழியில் மோடி வரவேற்பு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று புதன்கிழமை குஜராத்துக்கு வருவதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க
ஜப்பான் பிரதமர் இன்று குஜராத் வருகை: ஜப்பானிய மொழியில் மோடி வரவேற்பு
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று புதன்கிழமை குஜராத்துக்கு வருவதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் ஜப்பானிய மொழியில் வரவேற்பு அளித்துள்ளார். 

இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார்.

குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறவுள்ள இந்தியா, ஜப்பான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, இந்திய-ஜப்பான் உறவுகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். 

அகமதாபாத்-மும்பை இடையேயான அதிவேக புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் இரண்டு தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். ஜப்பான் அதிவேக ரயில் நெட்வொர்க்குகளில் ஒரு முன்னோடியாக உள்ள இந்த திட்டம். இந்த திட்டத்திற்கு ஜப்பான் 80 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது. 

இந்த புல்லட் ரயில் 508 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு நடைமுறைக்கும் எனவும் இரண்டு நகரங்களுக்கு இடையில் பயண நேரம் கணிசமாக குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. உலகில் வேகமாக செல்லும் ரயிலாக ஷிங்கன்சன் புல்லட் ரயில் உள்ளது.

ஜப்பான் பிரதமரை வரவேற்கும் விதமாக அகமதாபாத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கு பிறகு இரண்டு தலைவர்களும் சபர்மதி ஆற்றின் கரையில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்கள்.

காந்திநகரில் மட்டும் சுமார் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அபேவுடன் இணைந்து காந்திநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com