6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெற்ற மகனையே கூலிப்படை வைத்துக் கொன்ற தாய்: காரணம் என்ன தெரியுமா? 

தான் பெற்ற மகன் பிற பெண்களிடம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவனது தாயே அவனை கூலிப்படை வைத்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 9:37 am

DIN

பயந்தர் (மகாராஷ்டிரா): தான் பெற்ற மகன் பிற பெண்களிடம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவனது தாயே அவனை கூலிப்படை வைத்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21). இவர் சிறு வயதிலிருந்து போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்துள்ளார். அத்துடன் பெண்களிடம் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதன் உச்சகட்டமாக தனது உறவினர்கள் உட்பட 12 பெண்களை ராம்சரண் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.

இவரது செயல்களால் வேதனைக்கு உள்ளான அவரது தாய், அவரைத் திருத்தவும் முயன்றுள்ளார், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் அவரது பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரையும் கூட ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இதனால் அவர் மேல் வெறுப்படைந்த அவரது தாய், இத்தகைய ஒருவனை மகனாக நினைப்பதை விட , அவனைக் கொல்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி அவரைக் கொல்ல முடிவு செய்து கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கூலிப்பயைச் சேர்ந்தவர்கள் ராம்சரணை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது கழுத்தை அறுத்து கொன்றனர்.இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்த விசாரனை நடத்திய பயந்தர் போலீசார், ராம்சரணின் தாய் மற்றும் கூலிப்படையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.