பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பஞ்ச்குலா வன்முறை: புதிய வியூகத்தை கடைபிடிக்கும் காவல்துறை

தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பஞ்ச்குலாவில் வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க காவல்துறை புதிய வியூகம் அமைத்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 10:13 am

PTI


சண்டிகர்: தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பஞ்ச்குலாவில் வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க காவல்துறை புதிய வியூகம் அமைத்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான சொத்துகள் நாசமாகின.

இந்த நிலையில், வன்முறையாளர்களை அடையாளம் காணும் வகையில் வன்முறையின்போது எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை ஹரியாணா காவல்துறை  வெளியிட்டுள்ளது. 

அதில் வன்முறையில் ஈடுபடும் நபர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட 43 பேரை தேடப்படும் குற்றவாளியாக ஹரியாணா காவல்துறையினர் அறிவித்து 2 நாட்களில் இன்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பஞ்ச்குலா வன்முறையின் போது பொதுமக்கள் எடுத்த புகைப்படம் மற்றும் விடியோக்களை அனுப்புமாறு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.