கர்நாடக அதிமுக (அம்மா அணி) நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக (அம்மா)துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பு:
கர்நாடக மாநில அதிமுக (அம்மா)அவைத் தலைவர் கே.முனுசாமி, கர்நாடக மாநில புரட்சித்தலைவர் அம்மா பேரவைச் செயலாளர் பி.சுப்ரமணி, கர்நாடகமாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கோலார் தங்கவயல் மு.அன்பு, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜிநகர் தொகுதி பி.ரவிக்குமார், மல்லேஸ்வரம் தொகுதி ஏ.மனோகரன், காந்திநகர் தொகுதி ஜி.ரவிகிருஷ்ணன், என்.வேடியப்பன், சாம்ராஜ்பேட் தொகுதி எஸ்.எம்.சீனுவாசன், டி.சந்திரசேகர், கோலார் தங்கவயல் வி.சீனுவாசன், பீனியா தொகுதி பி.மதன், ஜெயநகர் தொகுதி எஸ்.சம்பா ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து செப்.9-ஆம் தேதி முதல்விடுவிக்கப்படுகிறார்கள்.
புதிய நிர்வாகிகள்: கர்நாடக மாநில அதிமுக(அம்மா)அவைத் தலைவராக எம்.பி.சம்பத் (சிவமொக்கா), கர்நாடக மாநில எம்ஜிஆர் மன்றத்தின் மாநில இணைச் செயலாளராக ஜி.புருஷோத்தம்(சந்திரா லேஅவுட்), கர்நாடகமாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநிலச் செயலாளராக எம்.வெங்கடேஷ்(எல்.என்.புரம்), இணைச் செயலாளராக கே.வெங்கடேஷ்(அக்ரகாரம்).
கர்நாடகமாநில மகளிர் அணி மாநிலச் செயலாளராக சந்திரிகா(சகாயபுரம்), கர்நாடகமாநில அண்ணாதொழிற்சங்க மாநிலச் செயலாளராக ஏ.ஆனந்த்ராஜ்(கோலார் தங்கவயல்), பொதுக்குழு உறுப்பினர்களாக ஜே.கோவிந்தசாமி, சி.கிருஷ்ணமூர்த்தி, கே.சுந்தரமூர்த்தி, ரவி, நடராஜ், என்.கே.பாண்டுரங்கன், கே.வெற்றிவேல், சிவானந்தபாண்டியன், வி.சொக்கலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு கட்சியின் முழு ஒத்துழைப்பு அளித்திட கேட்டுக்கொள்கிறேன். கழகப் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, தலைமைச்செயற்குழு புதிய உறுப்பினர்களாக மாநில பொருளாளர் ஆர்.ராஜேந்திரன், பெங்களூரு மாவட்டக்கழக செயலாளர் கே.குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு அதிமுக(அம்மா)மாநிலச்செயலாளர் வா.புகழேந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


