ராணுவ வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் பாதிவிலையில் விற்கப்படுகிறது: கிராம மக்கள் அதிர்ச்சி தகவல்!

எல்லைப் பாதுகாப்பு படையை சேந்ந்த உயரதிகாரிகள், வீரங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பாதி விலையில்

புதுதில்லி: எல்லைப் பாதுகாப்பு படையை சேந்ந்த உயரதிகாரிகள், வீரங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பாதி விலையில் பொதுமக்களுக்கு விற்பதாக பாதுகாப்பு படை முகாம் அருகே வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் 29-வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் தேஜ் பகதூர் யாதவ். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தினமும் 11 மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களின் அவல நிலை யாருக்கும் தெரியாமல் உள்ளது என பேசியிருந்தார். ஆனால் இதுகுறித்து பாதுகாப்பு படை சார்பில் தேஷ் பகதூர் யாதவ் ஒரு குடிகாரர் என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உயரதிகாரிகள், வீரங்களுக்கு சேர வேண்டிய பொருட்களை பொதுமக்களுக்கு பாதி விலையில் விற்பதாக பாதுகாப்பு படை முகாம் அருகே வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதில், வீரர்களுக்கான அரிசி, பெட்ரோல், மசாலா சாமான்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பாதி விலையில் பொதுமக்களுக்கு விற்பதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குற்றச்சாட்டு குறித்து விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com