டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு தரமற்ற உணவு: உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து,

News image
Updated On :12 ஜனவரி 2017, 7:11 pm

DIN

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பாக பொது நல மனுவொன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோ காட்சியை வெளியிட்டார். எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற வகையில் இருப்பதாக அந்த விடியோவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பூரண் சந்த் ஆர்யா என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? அவை எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன? அவற்றுக்கு எத்தகைய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பன குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவிப்பது தற்போது அவசியமாகிறது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், துணை ராணுவப் படை நிர்வாகத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்படடுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய அமைச்சர் விளக்கம்: இதனிடையே, பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தனிப்பட்ட முறையில் தாம் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்று வரும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்கு நடுவே இந்தத் தகவலை தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, ராணுவ வீரர்களுக்கு இணையாக துணை ராணுவப் படையினருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரரான ஜீத் சிங் என்பவர் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் தில்லியில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
துணை ராணுவப் படையினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.