தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள்: கௌரி லங்கேஷின் தோழி அளித்த திடுக்கிடும் தகவல்

கௌரி லங்கேஷின் வீட்டை 3 நாட்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக கௌரி தன்னிடம் கூறியதாக அவரது  தோழி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 7:51 am

DIN


பெங்களூர்: கௌரி லங்கேஷின் வீட்டை 3 நாட்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக கௌரி தன்னிடம் கூறியதாக அவரது  தோழி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவரும், கௌரி லங்கேஷின் தோழியுமான மாளவிகா அவினாஷ் கூறுகையில், இது மிகவும் திட்டமிட்டப் படுகொலைதான் என்று நினைக்கிறேன். 3 நாட்களுக்கு முன்பு, வீட்டை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிடுவதாக கௌரியின் தாய் கூறியதாக என்னிடம் கூறினார். ஆனால், அதை கௌரி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

படுகொலை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மாளவிகா அவினாஷ், முன்னதாக கௌரி லங்கேஷுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன் என்றும் கூறினார்.

பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார்.

செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 

இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்.  இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.