சிறுநீரக பாதிப்பின் காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நல பாதிப்பு! 

சிறுநீரக பாதிப்பின் காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டும் அவர் ஓய்விலிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுநீரக பாதிப்பின் காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நல பாதிப்பு! 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: சிறுநீரக பாதிப்பின் காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டும் அவர் ஓய்விலிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (வயது 65). இவருக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அத்துடன் அதிகமான எடையின் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் அதற்காக அறுவை சிகிச்சையும்  செய்து கொண்டார். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தபோதும், பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டும் அவர் ஓய்விலிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு நாட்களுக்கு முன்னதாக ஜேட்லிக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறியுள்ளனர். எனவே ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் கிருமி தொற்று ஏற்படும் என்பதால் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறியதால் அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை. வீட்டில் இருந்தபடி அவர் அலுவலக பணிகளை கவனித்து வருகிறார்.

இதன் காரணமாகவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு மீண்டும் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அவர், இன்னும் பதவி ஏற்கவில்லை என்று தெரிய வருகிறது. உடல்நிலை பாதிப்பு தொடர்ந்தால், அவர் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com