ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அனைத்து அணைகளையும் பராமரிக்க ஒரே நதிநீர் வாரியம் அமைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து அணைகளையும் பராமரிக்க ஒரே நதிநீர் வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 6:44 am


புது தில்லி: அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து அணைகளையும் பராமரிக்க ஒரே நதிநீர் வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், நாட்டின் அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. அதே போல, ஒரே நதிநீர் வாரியத்தை அமைத்து அனைத்து அணைகளையும் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.

நாட்டில் எங்கோ நடக்கும் ஒரு பிரச்னைக்கு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அணைகளின் பராமரிப்பு குறித்து இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது உச்ச நீதிமன்றத்தின் வேலையல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.