/

பள்ளத்தாக்கில் விழுந்த பள்ளிப் பேருந்து: 27 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் திங்கள்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக

News image

பேருந்து கவிழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்தப் பகுதி மக்கள்.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:41 pm

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் திங்கள்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காங்க்ரா காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் பட்டியால் கூறியதாவது:
ராம் சிங் பதானியா நினைவு பள்ளியைச் சேர்ந்த அந்தப் பேருந்து, மாலை பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. அதில் மாணவர்கள் உள்பட 40-45 பேர் பயணித்தனர். அந்தப் பேருந்து, நுர்புர்-சம்பா நெடுஞ்சாலையில் குர்சால் கிராமத்தின் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையிலிருந்து விலகி ஆழமான மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 27 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியைகள், ஓட்டுநர் மதன் லால் (67) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர்.
இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். பதான்கோட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று சந்தோஷ் பட்டியால் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த நிலையில், மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் கிஷன் கபூர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தலைமையில் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இந்தக் கோர விபத்துக்கு மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.