ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நார்டிக் நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே ஆகியவை ஆதரவளித்துள்ளன.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தியா-நார்டிக் மாநாடு முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா வலிமை வாய்ந்த நாடுகளில் ஒன்று. எனவே, மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நார்டிக் நாடுகள் ஆதரவளிக்கும். 21-ஆம் நூற்றாண்டில் பொறுப்பான, சக்திவாய்ந்த அமைப்பாக ஐ.நா. திகழ்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்புப் பணிகளை ஐ.நா. பொதுச் செயலர் மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறார். அந்த முயற்சிக்கு நார்டிக் நாடுகள் ஆதரவளிக்கிறது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர மற்றும் தாற்காலிக உறுப்பு நாடுகள் பட்டியலில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. நிலையான வளர்ச்சி, பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவற்றை அமல்படுத்துவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்.
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகவும் நார்டிக் நாடுகள் ஆதரவளிக்கிறது.
சர்வதேச பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம், பருவ நிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில் அதிக ஒத்துழைப்பு அளிக்கவும் உறுதிபூண்டுள்ளோம். இந்தக் கருத்தை பிரதமர் மோடியும் வழிமொழிந்தார்.
'இந்தியாவில் தயாரிப்போம்', 'தொடங்கிடு இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா', 'தூய்மை இந்தியா' ஆகிய நலத் திட்டங்களை இந்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவது நார்டிக் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
கடல்சார் விவகாரங்கள், துறைமுகங்களை நவீனப்படுத்துதல், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சர்வதேச சமூகத்துக்கு பயங்கரவாதம் கடும் சவால்களை அளித்து வருகிறது என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நார்வே பிரதமர் எர்னா சோல்பர்கை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவரிடம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் நார்வே முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
'வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும், நார்வே நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார்' என்று நார்வே அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்டிக் நாடுகளின் பிரதமர்களை மோடி தனித்தனியாகச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


